எக்ஸாம் ஹாலில் பவர் கட்! - செல்போன் டார்ச்சில் தேர்வு எழுதிய மாணவர்கள் வீடியோ!
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் முங்கர் பகுதியில் இயங்கிவரும் கல்லூரி ஒன்றில் தேர்வு நடந்துள்ளது. மாணவர்கள் பரபரப்பாகத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அந்த சமயத்தில் திடீரென பவர் கட் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியில் கடுமையாக மழை பெய்த காரணத்தால் பவர் கட் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்வு அறை கடுமையான இருளில் மூழ்கியதால் தேர்வைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டரை இயக்க முயற்சி செய்தபோது அதுவும் இயங்கவில்லையாம். என்ன செய்வது எனத் தெரியாமல் மாணவர்கள் ஒரு புறம் விழித்துக்கொண்டிருக்க மறுபக்கம் கல்லூரி நிர்வாகமும் செய்வதறியாது திகைத்துள்ளது.
மின்சாரமும் வராது; ஆனால் தேர்வையும் எழுதியாகவேண்டும் என்ற சூழல் எழுந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்துக்கு அப்போதுதான் புதிதாக உதித்துள்ளது அந்த ஐடியா! அந்த வகையில் மாணவர்களை செல்போன்களைக் கொண்டே தேர்வை எழுதவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?
இதையடுத்து அந்த இருட்டில் மாணவர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதினர். ஒரு கையில் செல்போனைப் பிடித்துக்கொண்டே மறு கையில் தேர்வை எழுதினர்.
இதனிடையே, பவர் கட் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்யாதது ஏன் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்துள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் அனுமதிக்காதவர்கள், தற்போது மட்டும் செல்போன்களை அனுமதிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | உருவாகிறது வாஜ்பாய் பயோபிக்! - லீடிங் ரோலில் நடிக்கப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR