இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ள படம் அண்ணனுக்கு ஜே. இப்படத்தியில் முழுக்க அரசியலை விமர்சிக்கும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளன.  இதில் அட்டகத்தி ஹிரோ தினேஷ் ஓர் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சாதாரண மனிதன் எப்படி அரசியல்வாதி ஆகிறான் என்பதை மையமாக கருவாக அமைக்கப்பட்டுள்ள படம் மற்றும் மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் இயக்குநராய் அறிமுகமாகிறார் ராஜ்குமார் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.


இப்படத்தில் காதல், தொழில், சிறைவாசம், அரசியல் பிரவேசம் என்று நாயகனின் வாழ்க்கை நிகழ்வுகளை காமெடியாக சொல்லும் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


அரோல் கொரேலி இசையமைப்பாளராகவும், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும், ஜி.பி.வெங்கடேஷ் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.