எப்போதும் தங்களை வெளிச்சத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என பிரபலங்கள் விரும்புவது இயல்புாதான். அந்த வகையில், பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கிய, இந்தி பிக்பாஸ் ஓடிடி மூலம் புகழ்பெற்ற சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத்தும் எப்போதும் வித்தியாசமான தனது உடைகள் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயர்களால் செய்யப்பட்ட ஆடையில் இருந்து பஞ்சு மிட்டாய் ஆடை வரை இணையத்தில் இளசுகளின் இதயத்துடிப்பை அதிகரிப்பதில், உர்ஃபி ஜாவேத் வல்லவர் என்றே கூறலாம். ஆனால், தற்போது, அவரின் சமீபத்திய பாடல் வீடியோ ஒன்று சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது தெரியவந்தது. 



மேலும் படிக்க | பட்டாசாய் தெறிக்கும் தமன்னாவின் தீபாவளி கிளிக்ஸ்...


'Haye Haye Yeh Majboori' என்ற பெயரில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோதான் சிக்கலில் மாட்டியுள்ளது. அந்த வீடியோ குறித்து அடையாளம் தெரியாத ஒருவர் டெல்லியில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் வெளிப்படையான பாலியல் செயல்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுதல் என்ற முறையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



இதைத்தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தப்படாத கணக்கு ஒன்று, இதுகுறித்து பதிவிட்டுள்ளது. இருப்பினும் இந்த புகார் குறித்து நடிகை உர்ஃபி ஜாவேத் பதில் ஏதும் அளிக்கவில்லை. நடிகை உர்ஃபி ஜாவேத் பல இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  ஜிம்மில் இருந்து ஜம்முனு வெளியே வந்த ஜானு... கண்களை கவர்ந்த கிளிக்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ