அழகுத்தமிழில் பெயர்சூட்டி, விளம்பர வடிவமைப்புகளில் தூய தமிழைப் பயன்படுத்தியிருக்கும்‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதவது., அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.


மேலும் படிக்க | பேச்சுலர், ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!


‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை 'கிளர்வோட்டம்' என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்!


படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட  துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு.


#கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.


தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது.


இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.


மெய்யழகன் படத்தின் டீச்சர்:
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மெய்யழகன். நடிகர் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்த படம் குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படமாக தயாராகி உள்ளது.


ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவையும், கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் 27ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. 


இந்நிலையில், சனிக்கிழமை அதாவது கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி படத்தின் டீசர் கிளரவோட்டம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



 


மேலும் படிக்க | பாலிவுட் படங்களின் நடிக்க விருப்பம் இல்லை: நடிகர் டொவினோ தாமஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ