திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' (Cook With Comali) என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 


ALSO READ | குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ


 


இந்த நிகழ்ச்சியின் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் கோமாளிகளாக சிவாங்கி (Sivaangi), புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பாகத்தில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.


இந்த நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக அஸ்வின் (Ashwin), பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.


அந்த நிலையில் தற்போது மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கி எபிசோடு கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான பழைய கோமாளிகளே இந்த சீசனிலும் இடம்பெற்றுள்ள நிலையி புகழ் மட்டும் மிஸ்ஸிங். அவருக்கு பதில் சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களமிறக்கப்பட்டுள்ளனர். முதல் எபிசோடு என்பதால் கோமாளிகளின் அறிமுகம் நடந்தது. 


பரத், செஃப் வெங்கடேஷ் பட்டை கலாய்க்க செஃப் வெங்கடேஷிடம் அடி வாங்கியது போல பரத்தும் அடி வாங்கினார். இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பரத்தை செஃப் அடித்தது மிகவும் மோசமாக இருந்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.



இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கடேஷ் பட், பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள் என்றும், உண்மையில் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் அடிக்கவில்லை, செட்டில் நடப்பவை எல்லாமே வெறும் ஃபன் மட்டுமே. நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம். நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


ALSO READ | குக் வித் கோமாளி 3 ஷோவுக்கு வந்த புது சிக்கல், வெளியான முக்கிய காரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR