Cooku With Comali This Week: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பல புது முகங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் எப்போதும் போல கலந்து கொண்ட ஒரு சில கோமாளிகள் (ஜி.பி. முத்து, சிங்கப்பூர் தீபன், புகழ், மோனிஷா, மணிமேகலை, குரேஷி, சுனிதா, தங்கத்துரை, ரவீணா,  சில்மிஷம் சிவா) இந்த சீசனிலும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். இதில் தற்போது கிஷோர் ராஜ்குமார் எவிகட்டானார். அதேபோல் சென்ற சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி முதல்முறையாக குக்காக மாறி இருக்கிறார். பல வெரைட்டிஸ் சமைத்து வரும் சிவாங்கி முதல் வாரமே குக் ஆஃப் தி வீக் பட்டதை பெற்ற அசத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீசனில் (குக் வித் கோமாளி) தற்போது நான்காவது வாரம் கடந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் நடந்த இம்முனிட்டி டாஸ்க்கில் ஆண்ட்ரியா நவுரிகட் இம்முனிட்டி இம்முனிட்டி பேண்ட்டை பெற்றால். முன்னதாக முதல் வாரம் இந்த பேண்ட்டை விஷால் பெற்று இருந்தார்.


மேலும் படிக்க | தோனியை போலவே விறுவிறுப்பான் படப்பிடிப்பில் Lets Get Married!


இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.. 



முன்னதால் குக் வித் கோமாளி சீசன் 4 துவங்கியதில் இருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தருகின்றனர். முதலில் ஆர்.ஜே. பாலாஜி பின், கவின் உள்ளிட்டோர் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஏகே 62 படத்தில் மீண்டும் அஜித்துக்கு வில்லனாக வரும் பிரபல ஹீரோ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ