Cooku With Comali Contestants Salary : முதலாவது சீசன் முதல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனில் பல்வேறு போட்டியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் வார வாரம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி இந்த ஐந்தாவது சீசன் முதல் நான்கு சீசன்களை தாண்டி முற்றிலும் வேறுபட்டது. காரணம் இதில் எல்லாமே மாறிவிட்டது, நிகழ்ச்சியை பார்த்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும். மேலும் இந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொரு துறையில் இருந்து போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 பிரபலங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம். 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன? அட..நல்லா இருக்கே!


திவ்யா துரைசாமி (Divya Duraisamy): துணை நடிகையான திவ்யா துரைசாமியும் குக் வித் கோமாளியில் கவனம் ஈர்க்கும் குக்காக இருக்கிறார். இவருக்கு ஒரு எபிசோடிற்கு சுமார் ரு.12ஆயிரம் பேமண்ட் கொடுக்கப்படுகிறததாக கூறப்படுகிறது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா (Sujitha Dhanush): சின்னத்திரையில் பிரபலமான டிஆர்பியில் கலக்கி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வந்தார் சுஜிதா. இந்த தொடரில் தனம் என்ற லீடிங் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றார். தற்போது குக்கு வித் கோமாளியில் கலக்கி வரும் சுஜிதவிற்கு ஒரு எபிசோடிற்கு சுமார் ரூ.18 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறதாம்.


தொகுப்பாளினி பிரியங்கா (Priyanka Deshpande): சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வரும், இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு எபிசோடிற்கு சுமார் ரூ.18 ஆயிரம் ரூபாய் பேமண்டாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.


விடிவி கணேஷ் (VTV Ganesh): திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர், விடிவி கணேஷ், தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் குக்காக பங்கேற்று வருகிறார். தற்போது இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு எபிசோடிற்கு சுமார் ரூ.15 ஆயிரம் ரூபாய் பேமண்டாக வங்கப்படுகிறது.


பாடகி பூஜா வெங்கட் (Pooja Venkat): சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டுயாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் பாடகி பூஜா வெங்கட். இவர் தற்போது குக் வித் கோமாளி கலந்துக் கொண்டுள்ளார். இவர் ஒரு ஷோவிற்கு ரூ.9 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்.


ஷாலின் சோயா (Shaalin Zoya): குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஒரு ஷோவிற்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்.


அக்ஷய் கமல் (Akshay Kamal): சீரியல் நடிகரான அக்‌ஷய் கமல், குக் வித் கோமாளி 5ல் குக்காக இருக்கிறார். இவருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம்.


பிரபல யூடியூபர் இர்ஃபான் (Youtuber Irfan): பிரபல யூடியூபரான இர்ஃபான், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கிறார். இவருக்கு ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.15 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம்.


மேலும் படிக்க | தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ