சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை முழு நாட்டையும் ஆட்டிப் படைக்கிறது. கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தையும் விட்டு வைக்காமல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கோர வைரஸ். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பல நாட்களாக கொரோனா தொடர்பாக திரைத்துறையிலிருந்து வரும் மரணச் செய்திகள் அதிர்ச்சியூட்டுகிறது.  பல பிரபல பிரபலங்கள் இந்த வைரஸின் பிடியில் சிக்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். , சில நட்சத்திரங்களை கொரோனா காவு வாங்கிவிட்டது.


அந்த வரிசையில், பிரபல நடிகர் நிதீஷ் வீரா இன்று காலை கொரோனாவுக்கு பலியானார். அசுரன், காலா உட்பட பல பிரபலமான பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிதீஷ் வீரா.



45 வயதான நடிகர் நிதீஷ் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள ஓமாந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி, திங்கட்கிழமை அதிகாலை காலமானார். 


Also Read | தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி!


ரஜினிகாந்தின் காலா, தனுஷின் அசுரன் மற்றும் வெண்ணிலா கபாடிக் குழு, விஜய் சேதுபதியின் லாபம், புதுப்பேட்டை, பேரரசு உள்ளிட்ட பல படங்களில் நிதீஷ் நடித்து பிரபலமானவர் நிதீஷ் வீரா.
அசுரனில் நிதீஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நிதீஷின் மரணச் செய்தி அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள் பலரும் நிதீஷ் வீராவுக்கு  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



#NitishVeera என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


இதற்கு முன்பே, பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். சிலர் கொரோனா இல்லாத நிலையில் திடீர் என மரணித்துவிட்டனர்.
பிரபல நடிகர் விவேக், பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தாமிரா, எஸ்.பி. ஜனநாதன் என அண்மையில் காலமான நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.   


Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR