தனுஷ் டி 51 படத்தின் முக்கிய அப்டேட் இதோ: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள  நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பிறகு நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும்  தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகிவரும் இந்தப் படத்திற்காக, தன்னுடைய முடியை ஷார்ட்டாக்கி உள்ளார் தனுஷ். சமீபத்தில் திருப்பதியில் இவர் மொடையடித்த நிலையில், தன்னுடைய தலைமுடி குறிப்பிட்ட அளவு வளர்வதற்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை எடுத்து முடித்தார் தனுஷ் (Dhanush).


மேலும் படிக்க | சூப்பரான சுதந்திர தினவிழா விருந்து.. ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?


இதனிடையே தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் (Dhanush-Sekhar Kammula’s film) இணைதுள்ளார். தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தற்போது நாயகியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணையவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 



இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்க்தில் வீடியோ மூலம் தகவல் தெரிவித்து உற்சாகத்தையும் பதிவிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. 


தற்போது ராஷ்மிகா மந்தனா ‘அனிமல்’ என்கிற படத்தை முடித்துள்ளார். இதை அடுத்து ‘புஷ்பா’, ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது தனுஷ் -சேகர் கம்முலா காம்பினேஷனில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள டி51 படத்தில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 16 வயதினிலே நாயகிக்கு 60-வது பிறந்தநாள் இன்று..! ஸ்ரீதேவிக்கு மரியாதை செய்த கூகுள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ