Baba Bhaskar Reportedly Joined Thalapathy 69 Movie : 2025-ல் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது, ‘தளபதி 69’. இந்த படத்தின் பணிகள் தற்போது பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், இதில் இணைந்துள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69:


இன்னும் சில நாட்களில் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி, அரசியலில் நுழைய இருப்பவர் விஜய். இவர் கடைசியாக நடித்து வரும் படம் தளபதி 69. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இதனை கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சென்னையில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. 


இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பாபி டியோ, கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


புதிதாக இணைந்த நடிகர்..


தளபதி 69 படத்தில் யாரெல்லாம் நடித்து வருகின்றனர் என்பது குறித்த விவரம், இதற்கு முன்னரே வெளியாகி விட்டது. ஆனால், அவ்வப்போது சிறு சிறு கதாப்பாத்திரதங்களில் நடித்து வருபவர்களின் விவரங்களும் கசிந்து வருகிறது. இதில், தற்போது புதிதாக இணைந்திருக்கும் ஒருவர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 


யார் அவர்? 


அந்த நடிகர் வேறு யாருமில்லை. பாபா பாஸ்கர் மாஸ்டர்தான். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இருக்கும் பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். குறிப்பாக தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். இவரது ஸ்பெஷாலிட்டியே எந்த பாடலுக்கு நடனத்தை இயக்கினாலும் அதற்கு ஹீரோக்களுடன் சேர்ந்து கேமியோவில் வந்து நடனமாடுவார். அதிலும், தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தம புத்திரன், மாப்பிள்ளை, வேங்கை, மாரி, மாரி 2, ஜகமே தந்திரம், ராயன் படம் வரை பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். ஜகமே தந்திரம் படத்தில் இவர் தனுஷிற்கு அண்ணனாக நடித்திருக்கிறார். 



பாபா பாஸ்கர், தமிழில் மிக பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து, தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று முக்கிய போட்டியாளராக இருந்தார். இவரது ஜாலியான கேரக்டர் இவரை சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்பது மட்டுமன்றி, பார்வையாளர்களையும் மகிழ்விப்பார். இந்த நிலையில், இவர் தளபதி 69 படத்திலும் டான்ஸ் மாஸ்டராக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகிவில்லை. இதற்கு முன்னரே விஜய்யின் வில்லு படத்திற்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். 


தளபதி 69 தெலுங்கு பட கதையா? 


தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கிண்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் சில காட்சிகளுக்கான காப்புரிமையை தளபதி 69 படக்குழுவினர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதன் கதை அந்த படத்தின் கதையாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தளபதி 69: விஜய்யுடன் 2ஆம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! அவர் யார் தெரியுமா?


மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ