25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் தற்போது அதன் தயாரிப்புக்கு பிந்தைய நிலையில் உள்ளது. வெளியீட்டிற்கு மும்முரமாக தயாராகி வரும் தர்பார் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், படத்தின் நாயகன் ரஜினிகாந்த தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "என் வாழ்வின் ஆக சிறந்த டப்பிங் பணி... தர்பார் படத்திற்கான டப்பிங்க் பணியை முடித்தார் தலைவர் ரஜினிகாந்த்" என குறிப்பிட்டுள்ளார்.


இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரதீக் பப்பர், நிவேதா தாமஸ், தலிப் தஹில், யோகி பாபு மற்றும் சுனியல் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ப்ரதீக் முக்கிய வில்லனாக நடிக்கவில்லை என்றபோதிலும், படத்தின் முதன்மை வில்லனின் மகனாக நடிக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது இத்திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை சந்தோஷ் சிவன் மேற்கொண்டுள்ளார். மணி ரத்னத்தின் தலபதிக்கு பிறகு சிவன் ரஜினிகாந்த் உடன் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேட்ட-வுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் அவர் தொடர்ந்து வரும் இரண்டாவது படம் இதுவாகும். முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் இரட்டையர்கள் - ராம் மற்றும் லக்ஷ்மன் - அதிரடி பிரிவுகளை கையாள, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கையாண்டு வருகின்றார்.


அண்மையில் சர்க்கார் சர்ச்சையின் பின்னர் பின்வாங்கிய சன் பிக்சர்ஸ் இந்த படத்தை முதலில் வங்க முற்பட்டது. பின்னர் 2.0-ன் தயாரிப்பாளர்களான லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தினை பெற்றது. 


இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் இயக்குனர் சிவாவுடன் தனது அடுத்த படத்திற்காக ஒத்துழைக்க உள்ளார். தற்போது தலைவர் 168 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது, இது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எனவும் தெரிகிறது. இசையமைப்பாளராக டி இம்மான் படக்குழுவினருடன் இணைந்திருப்பதை படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.