கடல் அலையில் பாறை மீது தவறி விழுந்த டிடி அக்கா
பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்கா கடல் அலையில் பாறை மீது தவறி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி. டிடியைப் போலவே இருவரும் தொகுப்பாளராக சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அக்காவும், தங்கையும் ஒன்றாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் உள்ளன. வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின்னாளில் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!
அவருக்கு டான்ஸ் மீது எப்போதும் பிரியம் உண்டு. பரதநாட்டியம் கற்று இருக்கும் பிரியதர்ஷினி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருகிறார். குணசேகரன் குடும்பத்தின் 2வது மருமகளாக நடிக்கும் பிரியதர்ஷினியின் நடிப்பு சீரியல் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
தங்கை டிடியைப் போலவே ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி, அண்மையில் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், கடலுக்குள் இருக்கும் பாறை மீது ஏறி பரதநாட்டியம் ஆட முயற்சிக்கிறார். அவருடைய முயற்சிக்கு அலைகள் முட்டுக்கட்டைபோடுகின்றன. அதுமட்டுமில்லாமல், பாறை மீது ஆட முயற்சிக்கும் அவரை, அப்படியே கீழேயும் தள்ளி வீடுகிறது. தண்ணீரின் வேகத்தில் நிற்க முடியாத பிரியதர்ஷினி கீழே விழுந்து விடுகிறார். இன்னொரு ஷாட்டிலும் எதிர்பாராதவிதமாக கீழே விழுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், பார்த்து இருங்க.. அடி பட்டுவிட போகிறது என அக்கறையோடு டிப்ஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | ‘உஸ்னிக்’ எனப் பெயர் மாறிய ‘கைதி’ படம் - ரஷ்யாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR