‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் கதை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2022, 01:25 PM IST
  • கமல் நடித்துள்ள விக்ரம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம்.
  • விக்ரம் படத்தின் கதை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் வருகிற 3ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அண்மையில் வெளியான இதன் ட்ரெய்லர் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

விஸ்வரூபம் 2 வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. கமலுக்கு அதன் பின்னர் படங்கள் வெளிவரவில்லை. நீண்ட நாட்களுப் பின்னர் விக்ரம் வரவுள்ளதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் கமலின் ரசிகராக அறியப்படும் லோகேஷ் கனகராஜ் இதை இயக்கியுள்ளதால் இப்படத்தில் கமலை என்ன மாதிரியாகக் காட்டியுள்ளார் எனத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை பற்றி திரை வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, இப்படத்தில் புலனாய்வு அதிகாரியாகக் கமல் நடித்துள்ளாராம்.  தொடர் கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் பொறுப்பு அவரிடம் வர, அச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படும் மிகப்பெரிய கும்பலைக் கமல் கண்டடைகிறாராம்.

மேலும் படிக்க | துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..ரஜினியை முந்திய கமல்ஹாசன்!- வேற லெவல் ‘விக்ரம்’!

                           

அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள்தான் இதன் கதையாம். இதை முழுக்க ஆக்சன் காட்சிகள் நிரம்பப் படமாக்கியுள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இவை போக சில சஸ்பென்ஸான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளதாம்.

அதேபோல வேறு சில படங்களின் கதாபாத்திரங்களும் இப்படத்துக்குள் வருவது போலவும் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News