நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'டியர்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர்.


மேலும் படிக்க | ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி


டியர் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 


'வெள்ளிக்கிழமை நாயகன்'- 'வெள்ளிக்கிழமை நாயகி' என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஜீ.வி. பிரகாஷ் குமாரும், ஐஸ்வர்யா ராஜேசும் முதன்முறையாக இணைந்து 'டியர்' படத்தில்  நடித்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இப்படம், குட் நைட் படத்தின் பெண் வர்ஷன் என்று கூறப்பட்டாலும். இந்த படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ