தென்னிந்திய திரையுலகில், அதிகம் தேடப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டர், ஜி.வி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டுமா? ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு என படு பிசியான கலைஞராக வலம் வருகிறார், ஜி.வி. ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களும் சினிமாவிற்குள் நுழைவது போல, சத்தமே இல்லாமல் நுழைந்த இவர், இப்போது இயல்பான இசையிலேயே புதுமையை புகுத்தி இளசுகளின் மனங்களில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டார்.
ஜி.வி பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள்:
-இந்தியாவின் ‘இசைப்புயல்’ என அழைக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் குமாரின் தாய் மாமா என்பது உங்களுக்கு தெரியுமா? ஜி.வியின் தாய், ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி என்பது பலர் அறியாத விஷயம்.
-அந்நியன் படத்தில் வரும் “காதல் யானை வருகிறான் ரெமோ..” பாட்டை கேட்டதுண்டா? அதைப்பாடியவர்கள் யார் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் குமாரும் நடிகர் நகுல்-ம் தான். இந்த பாடலை பாடியபோது, ஜி.வி பிரகாஷ் குமாருக்கு வயது 18.
-அந்நியன் படத்திற்கு முன்னரே, 1994ஆம் ஆண்டு வெளியான பாம்பே படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா..’ என்ற பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தவர் ஜி.வி. இந்த படத்திற்கு, அவரது தாய் மாமாவான ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார்.
-ஹாரிஸ் ஜெயராஜ்ஜுடன் மொத்தம் 2 படங்களில் வேலை பார்த்திருக்கிறார், ஜி.வி. அதில் ஒன்று, அந்நியன் படம். இன்னொன்று, வினய்-சதா நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படம்.
-2006ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்தார், ஜி.விபிரகாஷ் குமார்.
-வெற்றிமாறனுடன் முதன் முதலாக கூட்டு சேர்ந்தது, பொல்லாதவன் படத்தில். பிறகு, இந்த கூட்டணி பின்னர் ஆடுகளம், அசுரன், விசாரணை என பல ஹிட் படங்களை கொடுத்தது.
மேலும் படிக்க | கதையின் நாயகியாக நடிக்கும் ஊர்வசி! விரைவில் வெளியாகும் சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்!
-இவர் இசையமைத்த படங்கள் ஹிட் ஆகவில்லை என்றாலும், பல இளைஞர்களின் ப்ளே லிஸ்டில் அப்படத்தின் பாடலகள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்.
-எல்.விஜய்யின் தெய்வ திருமகள் படத்தில் இணைந்து பணிபுரிந்த சைந்தவிக்கும் ஜி.வி பிரகாஷ் குமாருக்கும் காதல் பற்றிக்கொண்டது. பின்னர், இருவரும் ஒன்றாக தலைவா படத்திலும் “யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது..” என்ற பாடலை ஒன்றாக பாடினர். இருவரும் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் குழந்தை பிறந்தது.
-2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படம் மூலம், நாயகனாக அறிமுகமானார் ஜி.வி. கேமரா முன் நடிப்பது இவருக்கு வர்க்-அவுட் ஆக, தொடர்ந்து பல படங்களில் மளமளவென நடித்து விட்டார். தான் நடிக்கும் படங்களுக்கு, தானே இசையமைக்கவும் செய்தார்.
-சூரரை போற்று படத்திற்காக, சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருந்தினை பெற்றார் ஜி.வி. இதுமட்டுமன்றி பல்வேறு மாநில மற்றும் ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் அவர் வாங்கியுள்ளார்.
-சூரரை போற்று கூட்டணி, அடுத்து சூர்யாவின் 43ஆவது படத்திலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் ஜி.வி பிரகாஷ் குமார்தான் இசையமைப்பதாக பேசப்படுகிறது.
-சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் இசையமைப்பாளர், ஜி.வி பிரகாஷ்தான். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்கிறார், ஜி.வி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ