தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 டிசம்பர் 6 அன்று காலமானார். இந்நிலையில் காலம் சென்ற அதிமுக பொதுச்செயலாளரின் வாழ்க்கையைப் பற்றி கிட்டத்தட்ட ஐந்து வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், ஜெயலலிதாவின் மருமகள் ஜே தீபா மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார். கௌதம் மேனன் (Queen வலைத் தொடரின் இயக்குனர்), இயக்குநர் AL விஜய் இயக்கும் தலைவி படங்கள் தன்னுடைய அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படுவதாகவும், இந்த படங்களை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் நீதமன்ற உதவியை நாடினார். 


இந்நிலையில் இந்த வழக்கின் போது தீபா தரப்பு., ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் தன் முன்னிநிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கும் Queen இணைய தொடரை பார்க்க விரும்பவதாகவும், சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க விரும்புவதாகவும் தெரிவித்தது.


இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்., தீபா நீண்ட காலமாக ஜெயலலிதாவுடன் இணைந்து வாழவில்லை எனவும், எனவே அவர் அவரது குடும்பத்தார் என்ற கோட்பாடில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்து அவரது வழக்கினை தள்ளுபடி செய்தனர்.


முன்னதாக தனது மனுவில் தீபா ஜெயக்குமார் குறிப்பிடுகையில்., எந்தவொரு திரைப்படத்தையும் அல்லது வலைத் தொடர்களையும் (ஜெயலலிதாவின் வாழ்க்கையில் உருவாக்கப்பட்டு வரும் படங்கள்) தயாரிப்பாளர்கள் அவருக்கும் அவரது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் தயாரிப்பது தவறு, தங்கள் குடும்பத்தின் அனுமதி பெற்றே திரைப்படத்தினை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


இதற்கிடையில், கௌதம் வாசுதேவ் மேனனின் ராணி முற்றிலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படம் அல்ல, ஆனால் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனையான விளக்கக்காட்சி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் தயாரிப்பிற்கா இந்த அணி ரூ.25 கோடி செலவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவின் மனுவில் கோரப்பட்டுள்ள நிபந்தனைகள் இந்த திரைப்படத்திற்கு பொருந்தாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


AL விஜய் இயக்கிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவியின் முன்னோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று தீபாவின் ஆலோசகர் வற்புறுத்தியபோது, தீபா ரூ.200 செலுத்தி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.


முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் மருமகள் தீபா ஆவார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் நடித்த கௌதம் மேனனின் வலைத் தொடர் (Queen) டிசம்பர் 14-ஆம் தேதி MX Player வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.