செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். மேலும் ரியாலிட்டியோடும், வழக்கமான டெம்ப்ளேட்டுகளை மீறியும் ஒரு மன்னர் படம் தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் மூலமே சாத்தியமானது. குறிப்பாக செல்வராகவனின் காட்சியமைப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்தின் முக்கியமான ப்ளஸ்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் - வேற லெவல் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க!


மேலும், அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்துக்கு மிகவும் பலமாக இருந்தது. இந்தச் சூழலில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டு உருவாவதை செல்வராகவன் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து ஆயிரத்தில் ஒருவன் 2ல் பார்த்திபன் இருப்பாரா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்திபன் தஞ்சாவூரில் ரசிகர்களுடன் பார்த்தார். அதன் பிறகு அவர் பெரிய கோயில் சென்று வழிபாடு செய்தார்.


 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இயக்குநர் செல்வராகவன் கூறியது. அந்தப் படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக இருந்தது. ஆனால் தனுஷிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.


 



அவர் நடித்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்” என்றார். முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்டிஹ்ல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | செப்டம்பர் 30 - த்ரிஷாவுக்கு ஸ்பெஷல்; காரணம் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ