வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வித்தியாசமான கதைக்களத்தில் 2019-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தான் ''அசுரன்'.  இப்படத்தில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ ரவுடி பேபி பாட்டின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த வருமானம்!


எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.  இத்திரைப்படம் அதிகளவில் நேர்மறை விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் சாதி ரீதியான ஒடுக்குமுறையை பற்றி வெளிச்சம் போட்டு காட்டியது.


2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுக்கு ''அசுரன்'' சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டு, தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.  அதனையடுத்து இப்படத்தை சிறந்த படமாக தேர்வு செய்து விகடன் விருது வழங்கப்பட்டது.  தென்னிந்திய திரைப்பட விழாவில் இப்படத்தில் தனுஷிற்கு மகனாக நடித்த கென் கருணாஸிற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்கலயே பாடலை பாடிய சைந்தவிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது.  


 



இந்நிலையில் பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI)  ''அசுரன்'' படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.  ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல மொழி படங்களும் திரையிடப்பட்டு, பல கலைஞர்களுக்கும் விருது வழங்கிய நிலையில் தனுஷிற்கு இவ்விருது வழங்கப்பட்டது தமிழ் திரையுலகை பெருமையடைய செய்துள்ளது.  இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை சமந்தா சிறப்பு அழைப்பாளராக, அழைக்கப்பட்டு உரையாற்றியற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் கர்ணன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR