சினிமாவிற்கு வந்த புதிதில் கதாநாயகனுக்காக தகுதி இல்லை என கூறி பலரால் ட்ரோல் செய்யப்பட்டவர், தனுஷ். ஒல்லியான தேகம், பேந்த பேந்த முழிக்கும் பார்வை, ஆனால் கண்கள் முழுவதும் கனவு, இதுதான் தனுஷின் இளமை காலத்தை நினைத்து பார்க்கையில் நம் கண் முன்பு வந்து நிற்கும். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட்-பாலிவுட் என பல திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இன்று 40ஆவது பிறந்தநாள். இந்த நாளில், தனுஷ் நடித்த படங்களில் டாப் ரேட்டட் படங்களை இங்கு பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசுரன்:


ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு தன் கதாப்பாத்திரத்திற்காக மெனக்கெட்டு நடிப்பதற்கு பெயர் போனவர் தனுஷ், அப்படி பெரும் முயற்சி செய்து இவர் நடித்திருந்த படம், அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம், அந்த காலத்தில்  நடந்த சாதிய ரீதியிலான அடக்குமுறைகளை அப்பட்டமாக காண்பித்திருந்தது. இதில் முதல் பாதியில் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் ஃப்ளேஷ்பேக்கில் கோபக்கார இளைஞராகவும் நடித்து பலரையும் மெய் சிலிர்க்க வைத்தார் தனுஷ். படங்களை விமர்சனம் செய்யும் பிரபல நிறுவனமான ஐ.எம்.டி.பி, இந்த படத்திற்கு 10க்கு 8.4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது. தனுஷின் படங்களிலேயே இதுதான் தற்போது முதல் இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | ‘கில்லர்..கில்லர்’ வெறித்தனமான ஹீரோவாக தனுஷ்-வெளியானது ‘கேப்டன் மில்லர்’ டீசர்..!


புதுப்பேட்டை:


வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் கடந்துவிட்டாலும் இன்னும் ஆறாத வடுவாக மனதில் நிற்கும் படம், புதுப்பேட்டை. பிச்சைக்காரனாக இருந்து பிறரை கட்டியாளும் ரௌடியாக வளரும் ஒருவனுக்கு பணத்தின் மீதும் பதவி மீதும் ஆசை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. தன் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் 2ஆவது முறையாக நடித்திருந்த படம் இது. கல்ட் க்ளாசிக் படங்களுள் இது முக்கிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.எம்.டி.பி நிறுவனம் இந்த படத்திற்கு அளித்துள்ள ரேட்டிங், 10க்கு 8.4. 


வட சென்னை:


“வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டு சேர்ந்தாலே வெற்றிதான்..” எனும் கூற்றுக்கு மற்றுமொரு உதாரணம், வட சென்னை திரைப்படம். கொலை, க்ரோதம், வன்மம், காதல் என பல விஷயங்களை இந்த படத்தில் காண்பித்திருப்பார் இயக்குநர். இதில் ‘அன்புவின் எழுச்சி..’ எப்போது என வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் இன்னும் காத்துக்கொண்டுள்ளனர். இதிலும் தனுஷ்தான் ஹீரோ. ஆனால் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும் என தெரியவில்லை. இப்படத்திற்கு 8.4 ஸ்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


ஆடுகளம்:


“சேவல் சண்டையை வைத்தெல்லாம் படம் எடுப்பார்களா..?” என ஏளனமாய் சிரித்தவர்களை எகிறி ஓட வைத்த படம், ஆடுகளம். 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கருப்பு கதாப்பாத்திரத்தில் சேவல்களை வளர்த்து சண்டைக்கு விடும் இளைஞனாக நடித்திருப்பார் தனுஷ். இதுவும் இவர் வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்து நடித்த படம்தான். ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் மோதல் என அனைத்தையும் கையாளும் சாமர்திய இளைஞராக நடித்து பலரையும் கவர்ந்தார். இந்த படத்திற்கு 8.1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. 


காதல் கொண்டேன்:


வாழ்க்கையில் காதலையே உணராத ஒருவன் இறுதியில் அதை உணரும் போது அதுவும் அவன் கையை விட்டு போனால் என்ன நடக்கும்..? காதல் கொண்டேன் படத்தின் சிம்பிளான கதை இதுதான். கல்லூரியில் படிக்கும் இளைஞனாக, பிறருடன் பழகத்தெரியாத மாணவனாக கண்ணாடி போட்டுக்கொண்டு அப்பாவி முகத்துடன் பலரையும் பாவமாக பார்க்க வைத்திருப்பார், தனுஷ். இதுதான் இவர் செல்வரகாவனுடன் கைக்கோர்த்து நடித்த முதல் படம். இந்த படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரம் போல இன்றளவும் வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஐஎம்டிபியில் 8 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. 


கர்ணன்:


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் கர்ணன். இது 2021ஆம் ஆண்டில் வெளியானது. போக்குவரத்துக்கு பேருந்தின்றி தவிக்கும் கிராம மக்களின் பிரச்சனையில் ஆரம்பித்து போர்களத்தில் முடியும் படம், கர்ணன். இந்த படத்தில் புரட்சி மிகு இளைஞனாக மெய் சிலிர்க்க வைத்திருப்பார், தனுஷ். இவர், இந்த படம் மூலமாகத்தான் மாரி செல்வராஜ்ஜுடன் முதன் முதலாக கைக்கோர்த்தார். இதற்கு ஐ.எம்.டி.பியில் 8 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. 


 மேலும் படிக்க | 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ