‘கில்லர்..கில்லர்’ வெறித்தனமான ஹீரோவாக தனுஷ்-வெளியானது ‘கேப்டன் மில்லர்’ டீசர்..!

Captain Miller Teaser Release: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2023, 12:51 AM IST
  • தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் கேப்டன் மில்லர்.
  • அவரது பிறந்தநாளையொட்டி டீசர் வெளியாகியுள்ளது.
  • ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
‘கில்லர்..கில்லர்’ வெறித்தனமான ஹீரோவாக தனுஷ்-வெளியானது ‘கேப்டன் மில்லர்’ டீசர்..! title=

Captain Miller Teaser Release: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது. 

கேப்டன் மில்லர் டீசர் வெளியீடு:

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, படக்குழு படத்தின் டீசரை 12.01 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

இந்த டீசரில் தனுஷ் துப்பாக்கியையும் கோடாரியையும் வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத ஆக்ரோஷத்தை காண்பித்திருக்கிறார். இவரை தேடுவதற்கு வெளிநாட்டுக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் காட்சிகள் யாவும் போர்களத்தில் நடைபெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனுஷ், நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் ஆக்ரோஷமாக சண்டை போடும் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நள்ளிரவில் வெளியாகியிருந்தாலும் படத்தின் டீசர் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய தோற்றத்தில் பிரியங்கா மோகன்:

‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரியங்கா மோகன், இதுவரை கியூட் ஹீரோயின் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். நகரத்து பெண்-கல்லூரி மாணவி என்று நடித்து வந்த இவர், தற்போது ஆளே மாறிப்போய் பாவாடை தாவணியில் கேப்டன் மில்லர் படத்தில் வருகிறார். 

Priyanka

இவர் கேப்டன் மில்லர் படத்தின் டீசரில் சில விநாடிகளே இடம் பெற்றிருந்தாலும் கையில் துப்பாக்கியுடன் இவர் வரும் காட்சி பலரையும் கவனிக்க செய்துள்ளது. இவரைப்பார்த்த ரசிகர்கள் “நம்ம பிரியங்காவா இது..” என வாய்பிளக்கின்றனர். 

இதுதான் கதையா..?

இலங்கையில் வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்காக போராடியவர்களுள் ஒருவர், கேப்டன் மில்லர். இவரது உண்மையான பெயர், வள்ளிபுரம் வசந்தன். இவர், 1987ஆம் ஆண்டு, இலங்கை படையுடன் நடைப்பெற்ற துப்பாக்கி சண்டையில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரை நீத்தவரை இன்றளவும் அவர்கள் மறவாமல் இவரது இறந்த நாளான ஜூலை 5ஆம் தேதியை கருப்பு நாளாக கொண்டாடி வருகின்றனர். இவர் வாழ்க்கையை மையமாக வைத்துதான் கேப்டன் மில்லர் படமும் எடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

கேப்டன் மில்லர் படத்தில் ஒரு இயக்குநர்..!

கேப்டன் மில்லர் படத்தில்சில நாட்களுக்கு முன்னர் புதிதாக ஒரு இயக்குநர் சமீபத்தில் இணைந்தார். கனா படத்தை இயக்கிய அருண் ராஜா குமாரராஜா இந்த படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இவர், ரஜினிகாந்த் உள்பட பலரது படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். சமயங்களில் பாடல்களும் பாடுவார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், கேப்டன் மில்லர் படத்தில் பாடல் வரிகள் எழுதியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படக்குழு:

தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகி ரோல் பிரியங்கா மோகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமன்றி படத்தில் இன்னும் ஏராளமான நடிகர்கள் உள்ளனர். தெலுங்கு திரையுலக நாயகன் சந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகனுடன் பயணிக்கும் ஒரு கதாப்பாத்திரமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன் வேடங்களில் வருகின்றனர். இவர்களை தவிர்த்து படத்தில் சில வெளிநாட்டு வில்லன்களும் இருக்கின்றனர். சாணி காயிதம் படத்தில் ரத்தம்-கொலை வெறி எனக்காட்டிய அருண் மாத்தீஸ்வரன், கேப்டன் மில்லர் படத்திலும் அந்த வெறித்தனத்தை அப்படியே கடைப்பிடித்திருப்பார் என நம்பப்படுகிறது. 

எப்போது ரிலீஸ்..?

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறவில்லை. ஆனால், படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு எப்போதோ அறிவித்துவிட்டது. ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 மேலும் படிக்க | 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News