அனுஷ்கா ஷெட்டியின் படத்தில் இணைந்த தனுஷ்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவுள்ள `மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி` படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பெப்பி பாடலை பாட தனுஷ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி, இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான 'அருந்ததி' எனும் டார்க் ஃபேண்டஸி படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. 'அருந்ததி' படம் இன்றுவரை பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது, பலரின் ஃபேவரைட் லிஸ்டிலும் இப்படம் உள்ளது. அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் கார்த்தி போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த இவர் பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். உடல் எடை காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் செய்திகள் வட்டமடித்தது. இருப்பினும் பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற இவர் நடித்திருந்த வரலாற்று படங்கள் இவருக்கு விருதுகளையும், பாராட்டையும் பெற்று தந்தது. பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
மேலும் படிக்க | அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்!
நீண்ட நாட்களாக அனுஷ்காவை திரையில் காண முடியாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு இவரது நடிப்பில் "நிசப்தம்/சைலன்ஸ்" படம் வெளியானது. தற்போது அனுஷ்கா நடிப்பில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. பி.மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பெப்பி பாடலை பாட நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 'அர்ஜுன் ரெட்டி' பட புகழ் இசையமைப்பாளர் ராதன் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படத்தில் ஒரு பாடலை பாட தனுஷை அணுகியதாகவும், அதற்கு தனுஷ் உடனே ஒப்புக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
அனுஷ்கா நடிக்கும் படத்தில் தனுஷ் பாடுவது இது முதல் தடவையல்ல, இதற்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான 'இரண்டாம் உலகம்' படத்தில் 'பழங்கள்ளா விஷ முள்ளா' எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார். தற்போது நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தனுஸின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.
மேலும் படிக்க | Actor Vikram: ஆதித்த கரிகாலனுக்கு அடங்காத வெறி..வாளுடன் போட்டோஷூட் செய்த சியான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ