Kubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் முழுமையான விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குபேரா திரைப்படத்தின் அப்டேட் :
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், தனுஷ் (Actor Dhanush). கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது தனது 51 வது படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இவர், தெலுங்கில் ஹிட் அடித்த ஃபிதா, லவ் ஸ்டோரி, ஹேப்பி டேஸ் உள்ளிட்ட சில ஃபீல் குட் படங்களை இயக்கியிருக்கிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


தனுஷ் 51 டைட்டில் :
இதந்தையே கடந்த மார்ச் மாதம் தனுஷ் 51 (Dhanish51) திரைப்படத்தின் டைட்டில் வெளியானது. அதன்படி தனுஷ் 51 'D 51' படத்திற்கு ‘குபேரா’ (D51 Titled as Kubera) என டைட்டில் வைக்கப்பட்டதுடன், படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது. அதில், தனுஷ் பிச்சைக்காரன் லுக்கில் காட்சியளித்திருந்தார். 


மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!



குபேரா திரைப்படத்தின் டீசர் அப்டேட்:
இந்நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தரும் வகையில், தற்போது அவர் நடித்து வரும் ’குபேரா’ படத்தின் டீசர் மே 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டீசர் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



தனுஷின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கியிருக்கி வருகிறார். இதையடுத்து தனது 50வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே எழுதி இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதை அடுத்து ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | Anchor DD: மரண படுக்கையில் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்! உருக்கமாக பேசிய டிடி..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ