வாடிவாசல் படத்தின் அப்டேட் : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது வாடிவாசல் திரைப்படம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிவாசல் திரைப்படம்:
தமிழர் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளுள் ஒன்று, ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம்தான் வாடிவாசல் (Vaadivaasal). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக சில வருடங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. 1940ஆம் ஆண்டில் சி.எஸ் செல்லபா என்பவர் எழுதிய ‘வாடிவாசல்’ எனும் கதைப்புத்தகத்தை வைத்து எடுக்கப்பட உள்ள படம்தான் இது. இந்த படம் குறித்த அறிவிப்பு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால், வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. 


சமீபத்தில் பட அப்டேட் வெளியிட்ட வெற்றிமாறன்:
வெற்றிமாறனின் எல்லா படங்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது பாேல ‘வாடிவாசல்’ (Vaadivaasal) குறித்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் இதற்காக ஒரு தனி குழு பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருந்தார்.


மேலும் படிக்க | Natural Star Nani: ஹாய் நன்னா படத்திற்கு பிறகு நானி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?


வாடிவாசலில் இருந்து விலகப் போறாரா சூர்யா:
சூர்யா (Actor Suriya) தான் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என தயாரிப்பு தரப்பு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவால் ஏற்படும் கால தாமதத்தை பார்த்து யாரை வைத்தாவது வாடிவாசல் திரைப்படம் உருவானால் போதும் என்கிற நிலைக்கு தயாரிப்பாளர் தாணு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து சூர்யா மற்றும் வெற்றிமாறன் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் சீரியாஸாக மீட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மீட்டிங்கில், வாடிவாசல் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக சூர்யா கூறினார் என செய்திகள் வெளியானதால், தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து பேச்சுவார்த்தை மூலமாக நடிகர் சூர்யா விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தற்போது 'கங்குவா' படத்தினை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பாலிவுட்டில் மகாபாரத கதையை தழுவி உருவாகும் 'கர்ணா' படத்திலும் நடிக்க தயார் ஆகி வருகிறார். 


சூர்யாவுக்கு பதில் தனுஷ்:
இதனிடையே தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிக்கப் போவதாக தகவல் ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. எனினும் கூடிய இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் காம்போவான தனுஷ், வெற்றிமாறன் (Vetrimaaran) இருவரும் வடசென்னை 2 திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்பாகவே வாடிவாசலில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Gautham Menon: 'ஜோஷ்வா இமை போல காக்க' படம் இந்த மோடில் தான் இருக்கும் - நடிகர் வருண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ