Dhanush Salary for Acting In Captain Miller Directed By Arun Matheswaran: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தற்போதைய டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் இவர், ஒரு படத்திற்கு பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் (Dhanush Salary Per Movie). அந்த வகையில், இவர் கேப்டன் மில்லர் படத்திற்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர்:


‘சாணி காயிதம்’ படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அருண் மாத்தீஸ்வரன், கேப்டன் மில்லர் (Captain Miller Review) படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம், ஒரு உண்மையான கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், காவல் அதிகாரி கதாப்பாத்திரத்திலும் பின்பு போராளி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் என இப்படத்தில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது மட்டுமன்றி, தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்து அப்படத்தின் பாடல்களை வெற்றியடைய செய்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். 


மேலும் படிக்க | Dhanush Net worth: தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?


தனுஷின் சம்பளம்:


நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படிகளில் ஏறி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகின. இதற்கு அடுத்த ஆண்டில் இவரது ‘வாத்தி’ படம் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இதையடுத்து அவர் நடித்துள்ள படம்தான், கேப்டன் மில்லர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். 


தனுஷ் ஒரு படத்திற்கு 12 கோடியில் இருந்து 13 கோடிகள் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக இவர் 12 கோடிதான் சம்பளமாக பெற்றுள்ளார். வருடங்கள் கடந்து செல்ல, இவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூ.15 காேடியை சம்பளமாக பெற்றுள்ளாராம் (Dhanush Salary in Captain Miller). கேப்டன் மில்லர் படம், 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது (Captain Miller Budget). 


காேலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட்:


தனுஷ், தனது சினிமா பயணத்தை 2002ஆம் ஆண்டு  ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் ஆரம்பித்தார். சுமார் 21 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருகிறார். 10வருடங்களுக்கு முன்னர், அம்பிகாபதி படம் மூலம் தனுஷிற்கு பாலிவுட்டிற்குள் ஹீரோவாக பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்க, அதை நன்றாக பயன்படுத்திக்காெண்டார். அப்படியே இவருக்கு ஹாலிவுட்டல் அடியெடுத்து வைக்கவும் ‘தி கிரே மேன்’  (Dhanush Hollyood Movie)படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார், தனுஷ்.


தனுஷின் அடுத்தடுத்த படங்கள்..


நடிகர் தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து, அம்பிகாபதி படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராஜ் இயக்கும் ஒரு இந்தி படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது (Dhanush Upcoming Movies). 


மேலும் படிக்க | Dhanush: பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தனுஷின் படங்கள்! லிஸ்டில் ‘கேப்டன் மில்லர்’ இடம்பெறுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ