மாரி செல்வராஜின் அடுத்த படம்! ஹீரோ இவர் தான் - வெளியான அறிவிப்பு!

மாமன்னன் படம் வெளியானதை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக தலவல் வெளியகியுள்ளது.

 

1 /5

துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணையவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படம் விளையாட்டு வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது.   

2 /5

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரி, இந்த படம் மானாதி கணேசன் என்ற கபடி வீரரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அவர் அர்ஜுனா விருது பெற்றவர் மற்றும் மிக நெருங்கிய உறவினர் என கூறினார்.  

3 /5

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் மூலம் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், துருவ் கடைசியாக விக்ரமுடன் மகான் படத்தில் நடித்தார்  .  

4 /5

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படம் வெளியான நிலையில் மாரி செல்வராஜ் இந்த படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.  

5 /5

துருவ் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் முடித்த பிறகு தனுஷ் படத்தின் வேலைகளைத் தொடங்குவேன் என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.