தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவு அடைந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம், பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.


தனது முதல் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்:-


"படப்பிடிப்பு முடிந்தது. ஃபகீரின் பயணம் முடிகிறது. அற்புதமாகத்தான் இருந்தது. என் மொத்த குழுவுக்கும் அன்பும், நன்றிகளும். கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்பேன். அடுத்த நிறுத்தம், வீடு !" 


 



 


என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.