தமிழ் திரையுலகின் பிரபல கலை இயக்குனரும், நடிகருமான ஜி.கே என்கின்ற கோபி காந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு வயது 60. ஜி.கே. என அழைக்கப்படும் அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


இவர் 2௦௦க்கும் மேற்பட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரஜினி நடித்த அருணாச்சலம் படத்திற்கு பிரமாண்டமான செட் அமைத்ததற்காக சிறந்த கலை இயக்குனர் என்ற மாநில அரசு விருதை பெற்றுள்ளார். இவர்  சின்னத்திரை தொடர்களிலும் நடித்து உள்ளார்.


கடந்த சில தினங்களாக இருதய பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணிக்கு அவர் உயிர் இழந்தார்.


அவரது உடல் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜி.கே. மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.