தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர், இயக்குனர் பாக்யராஜ் போட்டியிடவுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 23-ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 14-ஆம் தேதி வரை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் எனவும், இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் இந்த ஆண்டும் போட்டியிடுகிறது. 


நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் கார்த்தி பொருளாளர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். 


இவர்களை எதிர்த்து மற்றொரு அணியாக, தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களமிறங்கி உள்ளார்.


முன்னதாக சர்கார் திரைக்கதை விவகாரத்தில் பெரும் சர்ச்சைகிடையில் சிக்கிய பாக்கியராஜ் அவர்கள் தற்போது நடிகர் சங்க தேர்தலில் களமிறங்கி இருப்பது தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாகியுள்ளது.