கேங்ஸ்டரும் போலீஸும் என தோட்டாக்கள் தெறிக்க, தெறிக்க விடும் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று வெளியிடை திரைபடத்திற்கு பிறகு இயக்குனர் மணிரதனம் அவர்கள் இயக்கும் படத்துக்கு 'செக்கச்சிவந்த வானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புராடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெயர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' என்றும், தெலுங்கில் நவாப் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கின்றார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.


கடந்த பிப்ரவரி 14 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் நாயகன்கள் கதாப்பாத்திரம் பெயர் மற்றும் தோற்றம் நாள் ஒன்றுக்கு ஒருவர் என்ற விதத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.


ரதனாக அரவிந்த் சாமி, தியாகுவாக அருண் விஜய், இதியாக சிம்பு என மூவரும் இந்தப் படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார்கள். ரசூல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.