பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பார்த்திபனின் வித்தியாச முயற்சியால இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டீசர் வெளியீடும், சிங்கிள் வெளியீடும் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. சமுத்திரகனி, சசி, எழில், மதன் கார்க்கி உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்துகொண்டார். விழாவில் இருவரும் பேச ஆரம்பித்தபோது பார்த்திபனிடம் இருந்த மைக் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த அவர் கீழே அமர்ந்திருந்த ரோபோ சங்கரிடம் கோபமுடன் அந்த மைக்கை தூக்கி வீசினார். இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.


மேலும் படிக்க | நெஞ்சை உருக்கும் 'அக்கா குருவி' - திரைப்பட விமர்சனம்


இதனையடுத்து பார்த்திபன் இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “இச்சம்பவம் பெரிய சங்கடத்தை கொடுத்துள்ளது.எனது கோபத்தை நியாயப்படுத்தவில்லை. தூக்கி எறிந்தது மைக்தான், உடைந்தது என்னவோ மனதுதான்” என பேசியிருந்தார்.


 



இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “மைக்கை கண்டுபிடித்தவர் எமைல் பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ சங்கர், மைக்கால் பிடிபட்டவர் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என குறிப்பிட்டுள்ளார். முத்தத்தின் மூலம் மொத்த பஞ்சாயத்தை பார்த்திபன் முடித்துவிட்டார் என நெட்டிசன்கள் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் படிக்க | வெளிநாடுகளில் பாட்டு எழுதினால் தீவே வாங்கலாம் ஆனால் இங்கு?... வைரமுத்து வேதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR