குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடிப்பால் தன்பாக்கம் ஈர்த்துள்ள முன்னணி நடிக்கிறாக சிவகார்த்திகேயன் உள்ளார்.  அவர் படங்களுக்கு மக்கள் அமோகம் வரவேற்பு அளிப்பதுடன், அடுத்த அடுத்த படங்களை மிகவும் ஆர்வமாக எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.  தனது ஒவ்வொரு படங்களில் பல வித்யாசங்களை காட்டும் sk-வின் அயலான் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.  இந்நிலையில் தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக உள்ளார், தற்காலிகமாக 'SK21' என்று அழைக்கப்படும் தனது அடுத்த திட்டத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்க தனது உடலை பலப்படுத்தியுள்ளார். இப்போது, ​​இந்த முயற்சியின் வளர்ச்சி பற்றிய சூடான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காலா பட க்ளைமேக்ஸில் ரஜினி இறந்தாரா இல்லையா? 5 ஆண்டுகளாகியும் அவிழ்க்க முடியாத மர்மம்..!



SK21 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் உள்பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இன்று தனது இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.  சிவகார்த்திகேயன் 'மாவீரன்' ப்ரோமோஷனுக்குச் செல்வதற்கு முன், சமீபத்திய ஷெட்யூலில் விரைவில் இணைவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 நாட்கள் கால அட்டவணையில் முக்கிய பகுதிகளை வழிநடத்த குழு திட்டமிட்டுள்ளது.  கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியால் இயக்கப்பட உள்ள SK21 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உள்ளது.  இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒப்பந்தம் ஆகி உள்ளார். 


தற்போது சிவகார்த்திகேயன், 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், மிஷ்கின், கவுண்டமணி, சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரத் சங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல் மாவீரன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. முன்னதாக இயக்குனருடன், நடிகருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் பணிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டதாக சில செய்திகள் வெளியானது.


இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தின் டப்பிங் பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி உலகமெங்கும் மாவீரன் படம் வெளியாக உள்ளது.  இதற்கிடையில் மாவீரன் படத்தை தவிர நடிகர் சிவகார்த்திகேயன் பிரம்மாண்ட Sci-fi திரைப்படமான ‘அயலான்’ திரைபடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. 


மேலும் படிக்க | Lust Stories 2: புது பட டீசரில் படு கவர்ச்சி காட்டிய தமன்னா..செம ஷாக்கில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ