டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து பல்வேறு படங்களில் கமிட்டாகியிருக்கும் சிவகார்த்திகேயன், மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே உலா வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மற்ற கதாப்பாத்திரங்களையும் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. சர்பிரைஸாக நடிகை சரிதா நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படங்களுக்கு திரும்பியிருக்கிறார். மாவீரன் படத்தில் முக்கிய ரோலில் அவர் நடிக்கிறார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | புஷ்பா 2-ல் அடமழை தான்! விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?


அடுத்ததாக, கதாநாயகி யார்? என்ற கேள்வி இருந்து வந்தது. கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. பாலிவுட்டை கலங்கடித்து வரும் அவர் மாவீரன் மூலம் தமிழுக்கும் வரலாம் என கூறப்பட்டது. ஆனால், கோலிவுட்டில் என்டிரியாகும் வாய்ப்பு அவருக்கு இப்போது கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநரின் மகள் அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார். டிவிட்டரில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  



நடிகர் கார்த்தி நடித்து முடித்திருக்கும் ‘விருமன்’ படம் தான் அதிதி சங்கரின் கோலிவுட் என்டிரிக்கான முதல் படம். அந்தப் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸாகிறது. நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்த தகவல் வெளியானவுடன் அதிதி சங்கருக்கான வாய்ப்புகள் சினிமா வட்டாரத்தில் குவிந்தது. ஆனால், ஸ்டார் நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் அவர், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க கீரின் சிக்னல் கொடுத்துவிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மாவீரன் படம் வெளியாகிறது. தெலுங்கில் ’மாவீருடு’ என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 'என்னுடைய முன்னாள் காதலர்' மனமுருகி நினைவுகூர்ந்த விஜய் டிவி பிரியங்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ