'என்னுடைய முன்னாள் காதலர்' மனமுருகி நினைவுகூர்ந்த விஜய் டிவி பிரியங்கா

விஜய் டிவி பிரிய்ங்கா தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2022, 02:33 PM IST
  • பிரியங்கா தேஷ்பாண்டே வீடியோ வைரல்
  • முன்னாள் காதலர் குறித்த சுவாரஸ்ய தகவல்
'என்னுடைய முன்னாள் காதலர்' மனமுருகி நினைவுகூர்ந்த விஜய் டிவி பிரியங்கா title=

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் மற்றும் டிடி-க்குப் பிறகு பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் இவர்கள் இருவரும் அல்லது இவர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் இருப்பார்கள். அந்தளவுக்கு காமெடி, கலாட்டா மூலம் மக்களை வசியப்படுத்தி வைத்துள்ளனர். இதில் பிரியங்கா விஜய் டிவியில் எந்த தொகுப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை முதன்முறையாக முயற்சி செய்தார். அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக களம் புகுந்தார்.

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

ரியோ சென்றிருந்தாலும், அவர் பிக்பாஸூக்கு பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் முழு நேர தொகுப்பாளராக வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவின் என்ட்ரி, பெரியளவில் பேசப்பட்டது. நிகழ்ச்சிக்கும் கூடுதல் லைம் லைட்டைக் கொடுத்தது. அவருடைய நடவடிக்கைகள் தினம்தோறும் விமர்சனத்துக்குள்ளானது வேறு கதையாக இருந்தாலும், பிரியாங்கா பிக்பாஸில் இருக்கும் வரை அந்த நிகழ்ச்சிக்கு பக்கா டிஆர்பி ரேட்டிங்கை கொடுத்துக் கொண்டிருந்தார். 

ஒருகட்டத்தில் அவருடைய பெயர் பெரியளவில் டேமேஜ் ஆகிறது. டிரோல் மெட்டீரியலாக இருக்கிறார் என்பதை உணர்ந்த பின்னரே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிறிது காலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் காண்பதில் இருந்து தள்ளியிருந்த பிரியங்கா, மீண்டும் பழைய பிரியங்காவாக என்டிரி கொடுத்தார். அப்போது முதல் இன்று வரை தான் சந்தித்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, தொகுப்பாளினி வரிசையில் உச்சாணிக் கொம்பிலேயே உட்கார்ந்திருக்கிறார். 

பிக்பாஸில் இருக்கும்போதே அவருடைய கணவர் குறித்த சில வதந்திகள் வெளியானபோதும், அது குறித்து அவர் இதுவரை பொதுவெளியில் வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால், முதன்முறையாக தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து மவுனம் கலைத்திருக்கிறார். விஜய் டிவியில் இப்போது ‘ராஜூ வீட்ல பார்டி’ என்ற புத்தம் புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமலாபாலிடம் முன்னாள் காதலர் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அமலாபாலுக்கு முன்பாக பதிலளித்த பிரியங்கா, சின்ன வயதில் வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஒரு பையனை காதலித்ததாகவும், அவர் தன்னை கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை என காமெடியாக கூறினார். அவரின் இந்த கமெண்ட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News