சென்னை: புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் தாய் எஸ்.முத்துலட்சுமி  இன்று காலமானார். அவருக்கு வயது 88. சென்னையில் வயது முப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் உயிர் இழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இயக்குனர் ஷங்கரது (Director Shankar) தாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இறுதி சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கரின் தாயார் மறைந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்றுநோயாலும் பிற காரணங்களாலும், பல திரை பிரபலங்களும், அவர்களது சொந்தங்களும் இறந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக 2020 டிசம்பரில், ஏ.ஆர்.ரஹ்மானின் (AR Rhman) தாய் கரீமா பேகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஜனவரி 2021 இல், இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி மாரடைப்பால் காலமானார். இயக்குனர் சீமானின் (Seeman) தந்தையும் மே 13 ஆம் தேதி காலமானார்.  


ALSO READ: சீமானின் அப்பா காலமானார், முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி


இயக்குனர் ஷங்கர் தனது தாயின் மறைவு குறித்து சமூக ஊடகங்களில் இதுவரை எதையும் வெளியிடவில்லை.


முன்னதாக, இந்தியன் 2 இன் பாலிவுட் ரீமேக்கை அறிவித்த பின்னர் ஷங்கர் சட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டார். படத்தின் உரிமை தன்னிடம் உள்ளது என்றும் அதை ரீமேக் செய்யும் உரிமை ஷங்கரிடம் இல்லை என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறினார். இருப்பினும், படத்தின் உரிமைகள் தனக்கு சொந்தமானது என்று ஷங்கர் இதற்கு பதிலளித்தார். 


மறுபுறம், அவர் கமலை வைத்து இயக்கும் இந்தியன் 2 படமும் சிக்கலில் உள்ளது. படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் அமர்ந்து கலந்துரையாடி பரஸ்பரம் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியன் 2 தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஷங்கர் உற்பத்தி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் இயக்குனர் ஷங்கர் அதை மறுத்து விட்டார்.


ALSO READ: Corona RIP: காலா, அசுரனில் கலக்கிய நடிகர் நிதீஷ் கோவிடுக்கு பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR