இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப்-2,  தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை மட்டுமல்ல திரைத்துறையினரையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, ஒப்பீட்டளவில் குறைவான செலவில் எடுக்கப்பட்ட இப்படம் திரையில் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியா முழுக்க வசூலை வாரிக்குவித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளையும் படைத்துவருகிறது. இதன் மூன்றாம் பாகத்துக்கு தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் ராஜமெளலி, பிரசாந்த் நீல் என இன்று பல பிரம்மாண்ட இயக்குநர்கள் உருவெடுத்தாலும் இவர்களுக்கு முன்னோடி என இயக்குநர் ஷங்கரைச் சொல்லலாம். இந்நிலையில் தற்போது அவரிடமிருந்தும் இப்படத்துக்குப் பாராட்டு கிடைத்துள்ளது.



மேலும் படிக்க | ‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!


ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர், படத்தில் கதைசொல்லும் விதம், திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஆகியவை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்குச் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



வசனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைப் புகழ்ந்துள்ள அவர், படக்குழுவையும் பாராட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், பெரியப்பா அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காவல் நிலையத்தின் மீது யஷ் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, அந்தத் துப்பாக்கியை சிறுவன் ஒருவர் பெரியப்பா என அழைக்கும் வசனம் பிரபலம் ஆனது. அந்த வசனத்தைத்தான் இயக்குநர் ஷங்கர் தனது பதிவில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | விருது மழை பொழிந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’- சர்வதேச பட விழாவில் சாதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR