நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யை வீணாக்கிவிட்டார் நெல்சன் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி நிகழ்ச்சி ஒன்றில், கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமரமாட்டேன் என நெல்சன் பேச்சிய பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இதற்கிடையே பீஸ்ட் ரிசல்ட்டை பார்த்த சன் பிக்சர்ஸ், அடுத்ததாக ரஜினியை வைத்து நெல்சன் இயக்கவிருக்கும் படத்தை நிறுத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



இந்தச் சூழலில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வம்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ தளபதி 66 படத்தைப் பற்றி பேசவே பயமாக இருக்கின்றது.படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும் சில நாள்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 


எனவே படத்தைப்பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. ஆனால் விஜய் படத்தை ஒரு சிறந்த படமாக ரசிகர்களுக்கு வழங்கமுடியும் என நம்புகின்றேன்” என கூறியுள்ளார். 


மேலும் படிக்க | விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?


வம்சியின் இந்தப் பேச்சு, படத்தின் ஆரம்பத்திலேயே படம் பற்றி அதிகம் பேசி நெல்சன் போல் தானும் வாங்கிக்கட்டிக்கொண்டால் என்னாவது என்ற பயத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க | ராக்கி பாய்யா இது? புதிய கெட்டப்பில் மாஸ் காட்டும் யாஷ்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!