ராக்கி பாய்யா இது? புதிய கெட்டப்பில் மாஸ் காட்டும் யாஷ்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் தாடி, மீசையை நீக்கிவிட்டு படு ஸ்மார்ட்டாக மாறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 02:57 PM IST
  • கேஜிஎஃப்-2 வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • தமிழகத்தில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
  • யாஷின் புதிய கெட்டப் வைரல் ஆகி வருகிறது.
ராக்கி பாய்யா இது? புதிய கெட்டப்பில் மாஸ் காட்டும் யாஷ்! title=

சமீபகாலமாக தமிழ் படங்களை காட்டிலும் மற்ற மொழிபடங்கள் தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.  அதிலும் குறிப்பாக கன்னட திரைப்படமான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப்-2 தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளவிலும் பல ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியை நிலைநாட்டியுள்ளது.  கடந்த 2018-ல் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் சிறந்த வெற்றியை பெற்றது, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அதீத வரவேற்பு மற்றும் வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப்-2 படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது.  இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று செய்தி வெளியானத்திலிருந்தே ரசிகர்கள் பலரும் இப்படத்தை திரையில் கொண்டாட ஆர்வமாக காத்திருந்தனர்.

Yash

மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு

அதனையடுத்து ஏப்ரல்-14ம் தேதி கிட்டத்தட்ட பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது.  பல பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது.  இப்படத்தின் மூலம் நடிகர் யாஷ் அனைத்து ரசிகர்களின் விருப்ப பட்டியலிலும் முன்னணி இடத்தை பெற்றுவிட்டார், இவருக்கு தற்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

yash

நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்காக நீண்ட தாடி மற்றும் மீசையை வளர்த்து வைத்திருந்தார், இந்த கெட்டப் அனைவரையும் கவர்ந்திருந்தது.  இந்நிலையில் அவர் தனது நீண்ட நெடிய தாடி மற்றும் மீசையை நீக்கிவிட்டு படு ஸ்மார்ட்டாக மாறியுள்ளார், இவரின் இந்த புதிய கெட்டப் பலராலும் விரும்பப்படுகிறது.  இணையத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது, அதில் யாஷ், அவரது மனைவி மற்றும் குழுவினருடன் உற்சாகமாக இருக்கிறார், அவரது தாடியை அவரே ட்ரிம் செய்கிறார், இறுதியில் அவரது பழைய போட்டோவுடன் தற்போதைய கெட்டப்பை ஒப்பிட்டு பார்க்கிறார், அங்கு குழுமியிருந்த அனைவரும் கலகலப்பாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் கவனத்தை ஈர்த்து யாஷின் புதிய கெட்டப் வைரலாகி வருகிறது.

 

மேலும் படிக்க | பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News