பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான திஷா பாட்னி, 2015-ம் ஆண்டு "லோபெர்" (Loafer) என்ற தெலுங்கு பட மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட "எம்.எஸ்.தோனி" (M.S. Dhoni: The Untold Story) என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "பாஹி-2" படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் திஷா பாட்னி-ன் புகைப்படம் ஆதாரம் உள்ளே!!


இவர் உடற்பயிற்ச்சி செய்து தனது உடலை கட்டுகோப்புடன் வைத்துக்கொள்ளவதில் ஆர்வம் உள்ளவர். தற்போது இவர் தனது இன்ஸ்ட்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் நீச்சல் குளத்தில் மூழ்கிய நிலையில், தலைகீழாக நிற்கிறார்கள். இந்த காட்சி பார்ப்பதற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் என்னை போல உங்களாலும் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.