சென்னை: பல வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் கெளதம் மேனன். அவர் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'திரெளபதி' (Draupathi) திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் வில்லனாக அவதாரம் எடுக்கிறார் ‘காக்க… காக்க..’ இயக்குநர். ஒரு பிரபல இயக்குநர் (Film Director) மற்றொரு இயக்குநரின் திரைப்படங்களில் நடிப்பது தற்போது டிரெண்டாக இருந்தாலும், கெளதம் மேனன் வில்லனாக களம் காண்பது அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனால், இதன் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றது. 


தற்போது மோகன்.ஜி. இயக்கும் 'ருத்ர தாண்டவம்' என்ற திரைப்படத்தில் தான் கெளதம் மேனன் (Gowthan Menon) வில்லனாக நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு டிவிட்டரில் வெளியாகியுள்ளது.'ருத்ர தாண்டவம்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 


Also Read | வெங்கட் பிரபுவும் காஜல் அகர்வாலும் இணைந்து கலக்கும் Live Telecast


ருத்ர தாண்டவம்' திரைப் படத்தில் ரிஷி ரிச்சர்ட், த்ரிஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் செய்திகள் வெளியானாலும் வில்லன் யார் என்ற செய்தி இதுவரை வெளியிடப்படவில்லை.   


பிப்ரவரி 14ஆம் தேதியன்று காலையில் 'ருத்ர தாண்டவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அடுத்த முக்கியமான அறிவிப்பு என்று படக்குழு தெரிவித்த நிலையில், அதன்படியே அறிவிப்பும் வெளியானது.   


'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் ருத்ர தாண்டவத்தில், வில்லனாகிறார் இயக்குநர் கெளதம் மேனன் என்பதால், திரைப்படம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  


Also Read | சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய காரணம் என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR