SPB தனது முதல் பாடலை எந்த நடிகருக்கு பாடியிருக்கிறார் தெரியுமா?
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் எந்த நடிகருக்காக பாடியுள்ளார் என தெரியுமா?...
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் எந்த நடிகருக்காக பாடியுள்ளார் என தெரியுமா?...
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S. P. Balasubrahmanyam). கொரோனா தொற்று ஏற்பட்டதால், MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த பாடகர் SPB, கடந்த மாதம் 25 ஆம் தேதி காலமானார். அவரது உடல் 26 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் SPB நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
ALSO READ | மறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். காணொளி வாயிலாக பேசிய சிவக்குமார், SPB என்னை விட ஐந்து வருடம் சிறியவர். அவர் முதல் முதலில் எனக்குப் பாடிய பாடல், மல்லிகைப் பூ வாங்கி வந்தேன். பால் குடம் படத்துக்காக. இதற்கு முன்பே சாந்தி நிலையம் படத்துக்காக இயற்கை என்னும் இளைய கன்னி பாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள். எம்ஜிஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலையும் ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள்.
ஆனால் பால்குடம் படம் தான் முதலில் வெளியானது. 1969 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியானது. அந்தக் கணக்குப்படிப் பார்த்தால் எஸ்.பி.பி. தமிழில் எனக்குத்தான் முதலில் பாடியிருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.