புதுடெல்லி: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார் போட்டியாளர். ஆனால் அவர் வெளியேறியதற்காக கவலைப்படவில்லை. ஏன் தெரியுமா? மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவாரசியமாக நடைபெறும் இந்த பிக் பாஸ் நான்காவது நிகழ்ச்சியில் எதுவும் நடக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய எவிக்‌ஷனில் பிரபல மாடல் சம்யுக்தா வெளியேறினார்.  


போட்டியாளர்களில் கடைசி 3 நிலையில் இருப்பவர்களுக்கு4 கோடியே 73 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. வெளியேறுவார் என்று நினைத்த நிஷா தப்பித்தார். பிரபல மாடல் சம்யுக்தா எவிக்‌ஷனில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்  ஆனால், வெளியேறுவதற்கு கவலைப்படவில்லை என்று சம்யுக்தா தெரிவித்தார். தனது குழந்தையை பிரிந்து ஏங்கிக் கொண்டிருந்த தனக்கு, இந்த வெளியேற்றம் வேறொரு வழியில் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று சொன்னார் சம்யுக்தா.


வளர்ப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாலாஜி, ஆரி இருவரும் சம்யுக்தா மீது குறை தெரிவித்தனர். அதை கமலஹாசனும் ஒப்புக் கொண்டார். அதற்கு பதிலாக தாயான தன்னை பொறுப்பில்லாதவர் என்று சொல்லியது புண்படுத்தியதாக தெரிவித்தார் சம்யுக்தா.


இதையும் படிக்கலாமே | பிக் பாஸ் தமிழ் 4 : இந்த போட்டியாளர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு!


ஆனால் நிஷா வெளியேறவில்லை என்று போட்டியை நடத்தும் கமலஹாசன் சொன்னதும், அர்ச்சனா ஓடிப் போய் நிஷாவை கட்டிப் பிடித்து அழுதார். பலரும் நிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் யாராவது ஒருவர் வெளியேறித் தான் ஆக வேண்டும் அல்லவா?


ஆனாலும், நிஷாவுக்கு கிடைத்த ஆதரவுக்கு பிறகு ஒரு நாள் வேறு யாராவது குறை சொல்வார்கள், அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு டோஸ் காத்துக் கொண்டிருக்கிறது. 


ராணி போல விளையாட்டில் தொடர வேண்டும் என்றும் நிஷாவை பாராட்டினார்கள். நிஷா மீது பலருக்கும் அன்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.


எது எப்படியிருந்தாலும் சரி, பிக் பாஸ், பல்வேறு தரப்பினரையும் ஆவலுடன் பார்க்க வைத்திருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.


தொடர்புடைய செய்தி | வாயை திறந்தா ஒரே கலீஜ்.....சம்யுக்தா-சனம் தாறுமாறு மோதல்!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR