பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் வாரம் ஒருவர் வெளியேற வேண்டும். அதற்கு எலிமிநேஷன் என்ற நடைமுறையும் உண்டு.  வாரவாரம் யார் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் 4  (Bigg Boss Tamil)  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் நடிகர்  கமல்ஹாசன் (Kamal Haasan). வார இறுதியில் கமல்ஹாசன் திரையில் தோன்றும்போது கலக்கலாக இருக்கும். அப்போது அவர் தான் பிக்பாஸ் எவிக்‌ஷன் பற்றி அறிவிப்பார்.  இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாதவர்கள் யார் என்று தெரியுமா?


ரியோ (Rio Raj), அர்ச்சனா (Archana Chandhoke), சோம் (Somashekar), நிஷா (Aranthanggi Nisha), ரம்யா (Ramya Pandian), கேப்ரியெல்லா (Gabriella Charlton), ஆஜீத்  (Aajeedh Khalique), சிவானி (Shivani Narayanan) ஆகியோர் இன்னும் எவிக்‌ஷனுக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் ஒரே தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவானிக்கு (Shivani Narayanan) ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.


Also Read | வெளியானது 3வது புரோமோ...அர்ச்சனாவிடம் நறுக்குன்னு கேள்வி கேட்ட ஆஜீத்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR