நடிகர் சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் கூட்டணியில் கடந்த 9-ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் ’டாக்டர்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமே இதுவரையிலும் 54 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக திரை வட்டாரம் கூறுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ அசால்டாக அசத்தி இருக்கும் சிவகார்த்திகேயன்! டாக்டர் பட விமர்சனம்!


இந்த படம் ரிலீசுக்கு முன்னரே இப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி பலரும் இந்த பாட்டிற்கு அடிமையாகினர். பலரது காலர் டியூன்களிலும் இந்த பாடல் தான் ஒலித்தது. இதுவரை, யூடியூபில் இப்பாடல் 130 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததோடு மட்டுமல்லாமல்  1 மில்லியன் லைக்ஸ்களையும் வாரி குவித்தது. 


 



ஆனால் இப்பாடலின் ஒரிஜினல் விடியோவை வெளியிடாமலே ரசிகர்களை படக்குழு காக்க வைத்தது.  இந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பார்ப்பதற்காகவே பலரும் இந்த ‘டாக்டர்’ படத்தைப் பார்த்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.  இந்நிலையில்,படக்குழு தற்போது ‘செல்லம்மா’ பாடலின் ஒரிஜினல் வீடியோவை  வெளியிட்டிருக்கிறது.இப்பாடல் வெளியான 1 மணிநேரத்திலேயே 5 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியது. மேலும் இந்த பாடல் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி தெறிக்கவிட்டுள்ளது .


ரௌடி பேபி பாடலில் 1 ஸ்பூன்  மற்றும் புட்ட பொம்மா பாடலில் 1 ஸ்பூன் ,கொஞ்சம் சிவகார்த்திகேயன் ஸ்டைல்,கொஞ்சம், பிரியங்கா மோகன் கியூட்னஸ் சேர்த்து செய்த கலவையாக உள்ளது எனவும் ரசிகர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.  'டாக்டர்' படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு ,ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற‘செல்லம்மா’ பாடல் தெலுங்கிலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ கோர்ட்ல நீதி கிடைக்கலைனா ரோட்ல எறங்கி போராடுவேன்! வெளியானது ஜெய் பீம் ட்ரைலர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR