நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக  சில நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, விஜய்யை  அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். இருந்தாலும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின.


 



இந்நிலையில் வாரிசு படத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியாவது குறித்து நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாரிசு படத்தின் புகைப்படம், வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்துவருகின்றனர்.


 



வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக வாரிசு படம் உருவாகிக் கொண்டிருக்கிறதாம். சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | அதிதி ஷங்கரின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ