பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள படம் 'ஹே சினாமிகா'.  ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ், ஷியாம் பிரசாத், மிர்ச்சி விஜய், யோகி பாபு  போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு திரைக்கதையை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அப்படி போட்டோ போட்டது தப்புதான்: வருந்திய பிரபல நடிகை


இப்படத்தின் மூலம் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார்.  துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான 'ஓ காதல் கண்மணி' படம் அதிகப்படியான இளைஞர்களை கவர்ந்தது.  இப்படத்திலுள்ள பாடலின் ஒரு வரிதான் இப்படத்திற்கு 'ஹே சினாமிகா' என்கிற தலைப்பாக மாறியுள்ளது.  இப்படத்தின் கலர்ஃபுல்லான போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.   'ஓ காதல் கண்மணி' படம் போல இந்த படமும் இளைஞர்களை அதிகளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படம் மார்ச் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது.



இப்படத்தில்,காஜல் அகர்வால், அதிதி ராவ் மற்றும் பிருந்தா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியது குறித்து துல்கர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.  இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகும் என்று படக்குழு அறிவிருத்தபடி டிரைலர் வெளியாகி ரசிகர்களை ரசிக்க செய்துள்ளது.  துல்கரின் மனைவி கதாபாத்திரத்தில் அதிதி ராவ் நடித்திருக்கிறார், இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு Tom&Jerry போல இருக்கின்றனர்.  இதில் துல்கரின் தோழியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார், இவர் துல்கரிடம் அதிக காதல் காமிக்க அது மேலும் துல்கர்-அதிதி இடையே பிரச்னையை ஏற்படுத்துகிறது.  'என் புருஷன் எனக்கு வேணும்' என்று அதிதி , காஜலிடம் கெஞ்சும் காட்சி உணர்வுபூர்வமானதாக இருக்கிறது.  இந்த டிரைலர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


 



மேலும் படிக்க |  நான் இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன் : ரஷ்மிகா ஓபன் டாக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR