அப்படி போட்டோ போட்டது தப்புதான்: வருந்திய பிரபல நடிகை

காதலர் தினம் அன்று எடுக்கப்பட்ட மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூரின் காதல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 01:07 PM IST
அப்படி போட்டோ போட்டது தப்புதான்: வருந்திய பிரபல நடிகை title=

பாலிவுட்டின் டிரெண்டிங் ஜோடியான மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூரின் சமூக ஊடக புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அதன்படி காதலர் தினத்தன்று, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டு இருவரும் தங்கள் காதலை அப்புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தினர். ஆனால் தற்போது இந்த காதலர் தின புகைப்பட பதவுக்காக மலைக்கா சற்று வருந்துவதாக தெரிவித்து இருக்கிறார்.

உண்மையில் அவரது வருத்ததிற்கு காரணம் என்னவென்றால், அர்ஜுன் கபூருடன் மலைக்கா பகிர்ந்து கொண்ட புகைப்படத்தை முதலில் அர்ஜுன் கபூர் பகிர திட்டமிட்டிரும்ந்தார். ஆனால் மாறாக மலைக்கா அவரை முந்தி இந்த ரோமாண்டிக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மலைக்கா பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அர்ஜுன் அவரை கட்டிப்பிடித்துள்ளதை நாம் காணலாம். மேலும் மலைக்காவின் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிப்பதையும் காணலாம். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | மலைக்கா அரோராவின் கவர்ந்திழுக்கும் பிகினி கலக்கல் in pics

இதற்கிடையில் காதலர் தினத்திற்குப் பிறகு, இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள கதை வெளிவந்தது. இன்ஸ்டா ஸ்டோரியில் மலைக்காவின் இந்த இடுகையைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுன் கபூர், நான் உங்களுக்கு ஒரு படத்தை அனுப்பினேன், நீங்கள் அதை எனக்கு முன்பே இடுகையிட்டீர்கள் என்றார். அர்ஜுன் கபூருக்கு பதிலளித்த மலைக்கா அரோரா, 'கில்டி' என்று பதிவிட்டு இருந்தார். 

மலைக்கா அரோரா நடிகை மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியா உயிரே படத்தில் ‘ தைய தைய’ என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார். மலைக்கா அரோரா தற்போது பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக புகைப்படங்களை பதிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இணையவாசிகளை கிறங்கடித்த மலைக்கா அரோராவின் கிளாமர் ஜிம் ஆடை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News