Actor Marimuthu Issue: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படுபவர் நடிகர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பிரபலமடைவதற்கு முன்பே இவர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவராக இருந்தார். பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருந்தார். 

 

இவரின் துல்லியமான தமிழ் உச்சரிப்பும், மிடுக்கான உடல்வாகும் பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.  ஆனால், இவர் நடிகராவதற்கு இயக்குநராக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 2000இல் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். 

 

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். சமீபகாலங்களில் 'எதிர் நீச்சல்' தொடரில் அவரின் 'ஏ... இந்தாம்மா' என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது. அந்த வகையில், மாரிமுத்து திடீரென டிரெண்டாக ஆரம்பித்தார்.

 


 

அதாவது, ட்விட்டரில் ஆபாச ட்வீட்களுடன் இருக்கும் போலி கணக்கு ஒன்று, மார்டன் உடை அணிந்த பெண் புகைப்படத்துடன் 'Can I Call You' என நடிகர் மாரிமுத்து என்று பெயருள்ள போலி ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தங்களின் மொபைல் நம்பரை கேட்டு ட்வீட் செய்துள்ளது. அதற்கு பதிலளித்து, நடிகர் மாரிமுத்துவின் போன் நம்பரும் ட்வீட் செய்யப்பட்டதாக தெரிகிறது. எனவே, பெயர் தெரியாத பெண்ணிடம், நடிகர் மாரிமுத்து ஆர்வமுடன் பேசுவதாக நெட்டிசன்கள் சிலர் கொளுத்திப்போட, அந்த ட்வீட்டின் புகைப்படம் வைரலானது. 

இதையடுத்து, அந்த புகைப்படத்தில் உள்ள ட்விட்டர் கணக்கு போலியானது என்றும், நடிகரின் மொபைல் எண் பலரிடமும் உள்ளதால் யாரோ இதை தவறாக பயன்படுத்தியதாக நடிகர் மாரிமுத்துவின் மகன் அகிலன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். இதனை, நடிகர் மாரிமுத்து தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலும் உறுதிசெய்து, அந்த புகைப்படத்தில் உள்ளது போலி என விளக்கமளித்துள்ளார்.

 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ