சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்: கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் 24வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் விவரத்தை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 


மேலும் படிக்க | Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே தற்போது கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' பர்ஸ்ட் லுக்:
இதனிடையே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 17ஆம் தேதி வெளியாகயுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.


சிவகார்த்திகேயனின் 23வது படம்:
இதற்கு அடுத்து ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிறது. 


சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் அப்டேட்:
இந்நிலையில் தற்போது இந்த படங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் 24வது படம் குறித்து தகவல் வலம் வருகிறது. அதாவது அவரின் 24வது படத்தை சிபி சக்ரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வெங்கட் பிரபு கூட்டணியில் SK25:
ஒருபக்கம் எஸ்கே24 திரைப்படத்தின் அப்டேட்  (Actor Sivakarthikeyan Upcoming Movies) வெளியான நிலையில், தற்போது எஸ்கே25 படம் குறித்து தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சிவகர்த்திகேயனுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் எஸ்கே23, 24 ஆகிய படங்ககள் முடிந்ததும் வெங்கட் பிர்பு இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.


மேலும் படிக்க | Actress Keerthy Suresh Net Worth: அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ