இயக்குனர் பாலசந்தரின் டூயட் திரைப்படம் மூலம் பிரகாஷ் ராஜ் நடிகராக அறிமுகமானது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 1994 இல் நடிகை லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கையாவார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். 


ALSO READ | Ponniyin Selvan shoot update: இறுதிகட்ட படப்பிடிப்பில் பொன்னியின் செல்வன்


பின்னர் பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் ஆகஸ்ட் 24, 2010 அன்று திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதியருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். 


இந்நிலையில் இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள் ஆகும். அதனை முன்னிட்டு, ட்விட்டரில் ஒரு பதிவை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில்., சிறந்த தோழியாகவும், காதலியாகவும், சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிற தனது அன்பு மனைவிக்கு அதில் பிரகாஷ்ராஜ் நன்றி கூறியுள்ளார். 


 



 


பிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, பொன்னியின் செல்வன், எனிமி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், புஷ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்லும், கேஜிஎஃப் சேப்டர் 2 உள்ளிட்ட கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்: போஸ்டர் ரிலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR