மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்,நடிகைகள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்புகள் தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஐஸ்வர்யாராய், கார்த்தி உள்ளிட்டோர் இங்கு கலந்து கொண்டனர். பின்பு அங்கிருந்து ஐதராபாத் சென்ற பொன்னியின் செல்வன் படக்குழு அங்கு படப்பிடிப்பு நடத்தி வந்தது. நேற்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து இன்று மத்தியபிரதேசம் சென்றனர். அங்கு குவாலியர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பழமை வாய்ந்த கோயில்கள், கற்சிற்பங்கள், இடங்கள் அங்கு அதிகம் காணப்படும் என்பதால் படப்பிடிப்பிற்கு ஏதுவாக இருக்கும் என்று மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.
சமீபத்தில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் (Prakash Raj) பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று இணைகிறார். இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கார்த்தியுடன் குவாலியர் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
ALSO READ | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் எடுத்து வருகிறார் மணிரத்தினம். சமீபத்தில் இப்படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ், ஆதித்ய கரிகாலன் - விக்ரம், அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, வந்தியத் தேவன் - கார்த்தி, குந்தவை - த்ரிஷா, நந்தினி - ஐஸ்வர்யா ராய், பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி, வானதி - ஷோபிதா, பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன், கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி, மலையமான் - லால், ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம், அநிருத்த பிரம்மராயர் - பிரபு, சோமன் சாம்பவன் - ரியாஸ் கான் என்று முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழு வேகமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடித்து விட்டு இன்று உடனடியாக மத்தியபிரதேசம் சென்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் கால் சீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிகமாக முடி மற்றும் தாடி வளர்க்க வேண்டும் என்பதால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் உள்ளதும். எனவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விரைவில் முடித்து திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
ALSO READ | ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR